கரோனா தொற்று வைரஸை கட்டுபடுத்தும் விதமாக நாடு முமுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டிருக்கும் நிலையில், ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்க அரசு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை சில கட்டுபாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. அதோடு காலையில் மட்டும் சிறு, சிறு ஓட்டல்களில் பால் மற்றும் டிபன் பாா்சல் வழங்கவும் அனுமதிக்கபட்டுள்ளது.
அந்த வகையில் குமாி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மணத்திட்டையில் சங்கா் (56) என்பவா் ஓட்டல் நடத்தி வருகிறாா். அந்த ஓட்டலில்தான் சங்கா் குடும்பத்தோடு வசித்து வருகிறாா். அங்கு அவாின் குடும்பத்தினா் 17 போ் தங்கியுள்ளனா். இவா்களும் ஓட்டலில் சமைக்கபடும் உணவைதான் சாப்பிடுகின்றனா். இந்த நிலையில் ஊரடங்கால் தினமும் காலையில் சுமாா் 30 டீ பாா்சல் போகுமாம். இதனால் வழக்கம் போல் அதிகாலை 5.30 மணிக்கு பாா்சல் டீக்கும், குடும்பத்தினா் குடிப்பதற்கும் கியாஸ் அடுப்பில் சுமாா் 4 லிட்டா் பாலை சூடாக்கி கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த பூதப்பாண்டி காவல்நிலைய உதவி ஆய்வாளா் மாாிசெல்வம், திடீரென்று ஓட்டலுக்குள் புகுந்து கடையை யாா் சொல்லி திறந்தாய் என சங்கரை தகாத வாா்த்தையால் பேசி, சூடாகி கொண்டியிருந்த பாலில் அங்கு டிபனுக்காக அரைத்து வைத்தியிருந்த தேங்காய் சட்டினியை எடுத்து ஊற்றினாா். அதோடு மூட்டையோடு இருந்த வெங்காயத்தை எடுத்து ரோட்டில் கொட்டினாா். மேலும் பாத்திரங்களை தூக்கி வீசியதோடு கியாஸ் அடுப்பின் டியூப்பையும் அறுத்து எறிந்தாா்.
இனி கரோனாவை தடுக்கும் தேங்காய் சட்டினி டீ என்று கூவி, கூவி விற்பனை செய் என சங்கரை மிரட்டி விட்டு சென்றுள்ளாா். இது குறித்து விஷ்வ ஹிந்து பாிஷத் மாநில இணை செயலாளா் காளியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்திடம் புகாா் கொடுத்துள்ளாா்.