சென்னை பாரிமுனையில் வட மாநிலத்தவர் நடத்தி வந்த டீ கடை ஒன்றில் பஜ்ஜி சாப்பிட்டவர் பஜ்ஜி நன்றாக இல்லை என குறைகூறியதால் ஏற்பட்ட வாக்குவாத்தில் டீ கடைக்காரர் வாடிக்கையாளரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ளது சிவ் சக்தி சாட் பந்தர் என்ற டீ க்கடை. அங்கு டீ மட்டுமில்லாது வாழைக்காய் பஜ்ஜி போடுவதும் வழக்கம். கடைக்கு பஜ்ஜி சாப்பிட வந்த ஞானமணி என்பவர் சாப்பிட்ட பஜ்ஜி நன்றாக இல்லை என குறைகூறியுள்ளார். இதன்காரணமாக டீ மாஸ்டர் அருணுக்கும், ஞானமணிக்கும் தகராறு ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த அருண் பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவும் கத்தியால் ஞான மணியை குத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பூக்கடை காவல்துறையினர் ஞானமணியை, மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய அருணை பற்றி விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.