அரசுப் பள்ளி வகுப்பறையில் தகாத செயலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து ஆசிரியர்கள் வாட்ஸப் குழுவில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி உத்தமபாளையம் அருகே மசாமி நாயக்கன்பட்டியில், வாய்க்கால்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் லீனா புஷ்பராணி. இப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஜான் சத்தியபாபு இருவரும் திருமணமானவர்கள்.
இந்நிலையில் ஜான் சத்தியபாபு தான் வசிக்கும் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளிக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது லீனா புஷ்பராணிக்கும் ஜான் சத்தியபாபுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மலர்ந்து அடிக்கடி வெளியில் செல்வதுமாக இருந்துள்ளனர். இதற்கிடையே சில மாணவர்களே பயிலும் துவக்கப்பள்ளியில் காலியாக இருக்கும் வகுப்பறையில் பலமுறை இருவரும் தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது தனிமையில் இருந்ததை புகைப்படம் எடுத்து வைத்திருந்த ஜான் சத்தியபாபு அந்த புகைப்படங்களை தொகுத்து வீடியோவாக உருவாக்கியுள்ளார். அந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்னர் தவறுதலாக தேனி மாவட்ட ஆசிரியர்கள் குழுவில் பதிவிட்டுள்ளார். இதனால், இருவருக்குமான தவறான தொடர்பு வெளி உலகிற்கு தெரியவந்தது. இதனை அறிந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகம், ஜான் சத்தியபாபுவை சஸ்பெண்டு செய்தது. அதனை தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியை லீனா புஷ்பராணியும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக தேனி மாவட்ம முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தேவியிடம் கேட்டபோது... ஜான் சத்தியபாபு தனியார் பள்ளியில் பணியாற்றியதால் உடனே சஸ்பெண்டு செய்யப்பட்டார். லீனா புஷ்பராணி அரசுப் பள்ளி ஆசிரியை என்பதால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உண்மை தன்மை அறிந்த பின்னரே சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். வெளியான வீடியோவில் இருக்கும் புகைப்படங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணை செய்ய இருக்கிறோம் என்றார்.
இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.