
விருதுநகரில் 17 வயது சிறுவனுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த 33 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாட்கோ காலனியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. அருகிலிருந்த செங்கல் சூளை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மகாலட்சுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து மகாலட்சுமியின் கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக மகாலட்சுமி பணியாற்றி வந்த செங்கல் சூளையில் மேற்கொண்ட விசாரணையில் அதே சூளையில் பணியாற்றி வந்த 17 சிறுவன் ஒருவனும் காணாமல் போனது தெரியவந்தது.
இந்நிலையில் இவர்கள் இவரும் கன்னியாகுமரியில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு இருவரையும் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பெண்ணுக்கு சிறுவனுடன் முறையற்ற தொடர்பு இருந்தது தெரியவந்தது. தற்பொழுது மகாலட்சுமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.