கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர். அவர்களை எம்பி கனிமொழி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர்.

அவர்களது வருகையை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களும் பங்கேற்றுள்ளார். தற்போது கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்னை வந்துள்ளார்.

அதேபோல் இவ்விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். கி வீரமணி, வைகோ, டி.ராஜா ஆகிய அரசியல் தலைவர்களும் வருகை தந்துள்ளனர். பாஜ எம்பி சத்ருகன் சின்கா, முத்தரசன், திருமாவளவன், ஜிகே.வாசன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர். கவிஞர் வைரமுத்து, நடிகர் நாசர், பிரபு, வடிவேலு, விவேக், மயில்சாமி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.