Published on 04/08/2023 | Edited on 04/08/2023

நாமக்கல்லில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை அதிரடியாக அந்த அமைப்பு நீக்கி உள்ளது.
நாமக்கல்லில் பாலகிருஷ்ணன் என்பவர், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் மீது சட்ட விரோத மது விற்பனை புகார் எழுந்த நிலையில், அவரை விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சதீஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.