Skip to main content

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

ரயில்வே மற்றும் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சிலைகடத்தல் பிரிவில் பதவியேற்றபின்பு அவர் மீட்டுவந்த சிலைகள் ஆயிரக்கணக்கானவை, அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கானவை... வெற்றிகரமாக சிலைகளை மீட்ட ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இன்றுடன் பிரியாவிடையளிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Former Prime Minister Manmohan Singh retires

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் மீது குண்டர் சட்டம்; போலீசார் அதிரடி

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

trichy police commissioner immediate action taken 

 

திருச்சி மாவட்டம் தில்லைநகர் வாமடத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து அவரது மோட்டார் சைக்கிளை சிலர் எரித்தனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

 

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே நாளன்று சாஸ்திரி ரோட்டில் உள்ள டீக்கடை அருகே சைக்கிளில் தையல் மிஷின் வைத்து தொழில் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துக் கொண்டு 3 பேர் தப்பியதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிந்து தென்னூர் வாமடத்தை சேர்ந்த வீரப்பன் என்கிற ராஜ்குமார் (வயது 23), மாரியப்பன் (வயது19), விக்னேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

விசாரணையில், ரவுடியான ராஜ்குமார் மீது கோட்டை, தில்லைநகர், உறையூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும், ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து அவரது மோட்டார் சைக்கிளை எரித்து மிரட்டல் விடுத்த வழக்கு உள்பட 14 வழக்குகளும், மாரியப்பன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

 

இதையடுத்து ராஜ்குமார், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.