ஒரு கட்சியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வெளியேறினால் தான் பிளவு: தம்பிதுரை
ஒரு கட்சியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வெளியேறினால் தான் பிளவு ஏற்படும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அரியலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள செல்வதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பெரும்பான்மை குறித்து சட்டசபையில் மட்டுமே விவாதிக்க முடியும். ஒரு கட்சியிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வெளியேறினால் தான் பிளவு. அதிமுகவில் பிளவு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.