Published on 11/09/2019 | Edited on 11/09/2019
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 13 நாள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பின் நேற்று சென்னை திரும்பினார். இந்தப்பயணத்தின் மூலம் 8,835 கோடிக்கான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீர் மேலாண்மையை பற்றி அறிந்துகொள்ள இஸ்ரேல் செல்ல இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளையறிக்கை விடவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கைவிட்டிருந்தார். இந்நிலையில் விருதுநகரில் இதற்கு பதிலளிக்கு வகையில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,
வெள்ளையறிக்கை மட்டுமின்றி மஞ்சள், பச்சை அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் தருவோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவுடன் தொழில் தொடங்க முடியாது. ஸ்டாலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது எனக்கூறினார்.