Skip to main content

இடைத்தேர்தலில் தோற்றால் அதிமுகவில் இணைந்துவிடுகிறோம்  -    தங்கதமிழ்ச்செல்வன் 

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
theni


 

தேனி மாவட்டத்தில் உள்ள  அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது...... ’’அமைச்சர் கடம்பூர் ராஜீ, தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவதற்காக தூது விடுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  அமைச்சர் கடம்பூர் ராஜீ பயத்தில் குழம்பிப்போய் பேசி வருகிறார்.

 
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தோர்தலில் அமமுக வெற்றி பெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் அதிமுகவையும், இரட்டை இலையையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு முக்கிய பொறுப்பாளர்கள் விலகிக் கொள்ள வேண்டும், அமமுக தோற்றால் நாங்கள் அணைவரும் அதிமுகவில் இனைந்து விடுகிறோம் என்று விடுத்த சவாலிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜீ பயத்தில் குழம்பிப்போய், நான் அதிமுகவில் இணைய தூதுவிடுவதாக கூறுகிறார்.


அதிமுகவில் இணைவதற்கு எதற்காக தூதுவிட வேண்டும், மொட்டை கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம், அதிமுகவில் சேருவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம். எனவே நான் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்து கொண்டு கடம்பூர் ராஜீ பேசினால் அவரின் அமைச்சர் பதவிக்கு அழகு என தெரிவித்தார்.


    தொடர்ந்து பேசிய அவர், எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்துவதாக வெளியாகிய செய்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவில் யாருக்கும் தலைமைப்பண்பு கிடையாது.  அதனால் தான் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பதில்லை, மேடைக்கு மேடை, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் என அனைவரும் உலறி வருகின்றனர்.  

 ஆளுமையற்ற தலைமை இருப்பதால் இது போன்ற விரிசல்கள் ஏற்படத்தான் செய்யும் எனத் தெரிவித்தார்.    மேலும் மின்வெட்டு இருப்பதை ஒப்புக்கொள்ளும் மின்துறை அமைச்சர் பிரச்சனையை சரி செய்வதை விட்டுவிட்டு டி.வி. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதில் தீவரமாக உள்ளார்.   மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களில் கோட்டை விடுகின்றனர். எனவே இந்த அதிமுக அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


    ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையை 2ரூபாய் குறைத்தது போல் தமிழகத்தில் குறைக்கவில்லை அல்லது மத்திய அரசிடம் வலியுறுத்தி விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த இரண்டிற்கும் தமிழக அரசிடம் துணிச்சல் கிடையாது என குற்றம் சாட்டி பேசினார்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சின்னம்மாவுக்கே விசுவாசமாக இருப்பேன்; திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ போகமாட்டேன்! தங்கதமிழ்செல்வன் பேட்டி!!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018

 

s


டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். அதைக்கண்டு டிடிவியும் அவருடைய ஆதரவாளர்களும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

 


 இந்த நிலையில் டிடிவியின் தீவிர ஆதரவாளரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும்  ஆண்டிபட்டி தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான தங்கதமிழ்செல்வனும் கூடிய விரைவில் திமுகவுக்கு தாவப் போகிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எதிரொலித்தும் வருகிறது. 

 


 இது சம்பந்தமாக தங்க தமிழ்செல்வனிடம்  தொடர்பு கொண்டு கேட்டபோது... பொதுச்செயலாளர் சின்னம்மாவுக்கும்,  துணைபொதுச்செயலாளர் அண்ணன் டிடிவிக்கும்  விசுவாசமாக இருந்து கொண்டு கட்சிபணி ஆற்றிவருகிறேன்.   இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.   வேண்டுமென்றே அப்படி ஒரு பொய்யான தகவலை அரசியல் எதிரிகள் பரப்பி  இருப்பார்கள்.  அது தான் உண்மை. தற்பொழுது கூட அரசியல் சூழ்நிலைகளை பற்றி பேசுவதற்காக சின்னம்மாவை  சந்திக்க பெங்களூர் போகிறேன்.  அதுபோல் தொடர்ந்து சின்னம்மாவுக்கும், அண்ணன் டிடிவிக்கும் விசுவாசமாக இருப்பேனே தவிர  மாற்று கட்சியான திமுகவுக்கோ.  அதிமுகவுக்கோ போகமாட்டேன் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தான் என்னுடைய பணி தொடருமே தவிர கட்சி தாவல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் கூடிய விரவில்  அதிமுகவில் உள்ள இபிஎஸ், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் தான் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி பக்கம் வர இருக்கிறார்கள் என்று கூறினார்.