தொடர் விடுமுறையால் சாலைநெரிசல் - பயணிகள் தவிப்பு!
பண்டிகைக்காலம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னைக்கு சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பிறமாவட்டங்களைச் சேர்ந்த பேருந்துகள் சென்னையை நோக்கி வந்தவண்ணம் உள்ளன. ஆனாலும், சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் போதிய இடவசதி இல்லாததாலும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததாலும் சென்னை நோக்கி வந்த 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் வரிசையாக நிற்கின்றன. இந்தப் பேருந்துகளில் பயணித்த பயணிகள் பலமணிநேரங்களாக நடுவழியில் காத்துக்கிடக்கின்றனர்.
- அரவிந்த்