
நெட், செட், மற்றும் முனைவர் தகுதி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு கல்லூரியில் உதவி போராசியர் பணிவழங்கிட வேண்டும் என பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாரூரில் தமிழ்நாடு நெட், செட் மற்றும் முனைவர் ஆசிரியர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அரசு கலைக் கல்லூரியிலுள்ள காலியான உதவிப்பேராசிரியர் பணியிடங்களை அரசு பள்ளியில் பணி புரிகின்ற நெட் செட் மற்றும் முனைவர் தகுதி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் உதவி பேராசிரியரான நெட், செட் மற்றும் முனைவர் தகுதி பெற்றுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 50 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் இந்த கோரிக்கைளை தமிழகஅரசு நிறைவேற்றாவிட்டால் சென்னையில் முதற்கட்டமாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.