தமிழகத்தில் ஆண்டுதோறும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் இந்த வருடத்திற்கான பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் இணையதளத்தில் (மே-2) தொடங்கியுள்ளனர் . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31/05/2019. மேலும் பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிக்க இணையதள முகவரி :http://tneaonline.in/ ஆகும். இதற்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் அல்லது வங்கிகள் மூலம் செலுத்தலாம். அதே போல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு "தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம்" (TNEA) சென்னையில் மட்டும் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள பொறியியல் கலந்தாய்வில் சில மாற்றங்களை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் கொண்டு வந்துள்ளது.
இதில் நேரடி கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் கலந்தாய்வு என இரு முறைகளை கையில் எடுத்துள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு தமிழகத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட மையங்களில் நடைப்பெறுகிறது. எனவே இந்த பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வை இந்திய மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் " டிசிஎஸ் " (TATA CONSULTANCY SERVICES) நிறுவனம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இதற்கான மென்பொருளை உருவாக்கும் பொறுப்பையும் டிசிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ரேண்டம் எண் வெளியிடும் நாள் : 03/06/2019.
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள் : 17/06/2019.
ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்கும் நாள் : 03/07/2019.
ஆன்லைனில் கலந்தாய்வு முடியும் நாள் : 28/07/2019.
நேரில் கலந்தாய்வு துவங்கும் நாள் : 25/06/2019.
நேரில் கலந்தாய்வு முடியும் நாள் : 28/06/2019.
ஒட்டு மொத்த கலந்தாய்வு முடியும் நாள் : 30/07/2019.
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் !
1. விண்ணப்பத்தாரரின் பெயர்.
2. இ-மெயில் ஐடி.
3. தொலைப்பேசி எண்.
4. சாதி சான்றிதழ்.
5. சிறப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கான சான்றிதழ்கள்.
6. ஆதார் அட்டைகள் (மாணவர் , தந்தை).
7. பள்ளி விவரங்கள்.
8. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
9. 12 ஆம் வகுப்பு தேர்வு எண்.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி : http://tneaonline.in/ அணுகலாம். தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தங்கள் மாவட்டத்திலேயே சென்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்யலாம். இதற்காகவே டிசிஎஸ் நிறுவனத்தை தமிழக அரசு நியமனம் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் ( Tamilnadu Engineering Admission Committee - "TNEA") பதவியில் இருந்து அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் எம்.கே. சூரப்பா விலகியதால் இந்த வருட பொறியியல் கலந்தாய்வை (Directorate Of Technical Education) தொழில்நுட்ப இயக்ககம் நடத்துக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.