நீட் தேர்வால் கீரமங்கலம், கொத்தமங்கலம் போன்ற கிராமபுற மாணவர்கள் டாக்டர் ஆகமுடியவில்லை! செங்கோடன் பேச்சு (படம்)
நீட் தேர்வு நடத்தப்பட்டதால் கீரமங்கலம்ரூபவ் கொத்தமங்கலம் போன்ற கிராமபுற மாணவர்கள் டாக்டர் ஆக முடியாமல் அதிக மதிப்பெண் பெற்றும் தவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் பேசினார்.
தெருமுனைக் கூட்டம் :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று மத்தியரூபவ் மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை சுட்டிக்காட்டி துண்டறிக்கை கொடுக்கும் நிகழ்ச்சி கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் செரியலூர், கைகாட்டி, கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் துண்டறிக்கை பிரச்சாரம் முடிந்த பிறகு கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் தெருமுனை பிரச்சார கூட்டம் நகரச் செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் ஒன்றியச் செயலாளர் செல்வராசு விவசாய சங்கம் மணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் செங்கோடன் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கிணை விளக்கி பேசினார்.
நீட் பாதிப்பு :
மாவட்டச் செயலாளர் செங்கோடன் பேசும் போது.. மத்திய அரசு காவிரி பிரச்சணை முதல் ஜல்லிக்கட்டு என்று பல்வேறு வகையில் தமிழர்களை வஞ்சித்து வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவகல்லூரிகளை குறி வைத்து இங்குள்ள வடமாநில மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை தாரை வார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் என்ற தேர்வை நடத்தியுள்ளார்கள். இதற்கு தமிழக அரசும் துணை போனதால் கீரமங்கலம், கொத்தமங்கலம் போன்ற கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆகும் கனவை சிதைத்துவிட்டார்கள். அதிக மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர்.
இந்த நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராடினால் கைது செய்கிறது தமிழக காவல்துறை. புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்கச் சென்ற வாலிபர் சங்கத்தினரை கைது செய்திருக்கிறார்கள். இது போன்ற கைது நடவடிக்கைகளில் போலிசார் ஈடுபடுவதால் தான் மேலும் போராட்டங்கள் வலுவடைகிறது. அதே போல நெடுவாசல் திட்டத்திலும் விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள். அதனால் தான் இன்னும் போராட்டம் நடக்கிறது என்று பேசினார்.
-பகத்சிங்