Skip to main content

ஐஏஎஸ் ஆக விருப்பமா? தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

"Union Public Service Commission"  எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (Civil Services Examination -2019) ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான அறிவிப்பாணையை 19/02/2019 தேதி வெளியீட்டது. விண்ணப்பத்திற்கான தேர்வு கட்டணம் ரூபாய் 100 யை இணைய வழி பணபரிமாற்றம் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம் என அறிவித்தது. மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள் ( 18/03/2019) ஆகும் . 

ias exam

இந்த தேர்வில் விண்ணப்பிக்க பட்டப்படிப்பு கட்டாயமாகும். தொலைத்தூர கல்வியில் படித்த இளைஞர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. இணையதள முகவரி : https://upsconline.nic.in/  . Civil Services Preliminary Exam (முதன்மை தேர்வு) : 02-06-2019  நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு (Main Examination) : 20-09-2019 நடைப்பெறும் என மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு https://upsconline.nic.in/ இந்த இணைய தளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
 

பி . சந்தோஷ் , சேலம் 

சார்ந்த செய்திகள்