பொதுக்கூட்டத்தில் சொன்னதை நீதிமன்றத்திலும் சொல்லுவேன் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் அரசுக்கு எதிராக பேசியதாக கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 28 ம் தேதி அன்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை குறித்து உரையாற்றிய அவர் அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் அரசுக்கு எதிராக மற்றும் பொது அமைதிக்கு எதிராகவும் குற்றத்தை தூண்டும் விதம் பேசியதாக உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரி தென்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வைகோ மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய வைகோ,
பொதுக்கூட்டத்தில் சொன்னதை நீதிமன்றத்திலும் சொல்லுவேன், மக்களை திரட்டுவேன் அவர்களை தூண்டுவிடுவேன் என பகிரங்கமாக கூறியுள்ளார்.