




மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டி நடைபெற்றது. அதில், தமிழகத்தின் சார்பில், பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இதன் மூலம் அவர், 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
மேலும், இலக்கிய தாசன் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். சர்வதேச அளவில் இவர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வோம் என ராயபுரம் திமுக சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் மூர்த்தி உறுதி அளித்தார்.