Skip to main content

செந்தில்பாலாஜிக்கு போட்டியாக இருப்பேன் என்பதால் நீக்கப்பட்டேன்- இதுவரை நான்குமுறை கட்சி தலைமையால் நீக்கப்பட்டவர் !

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

அரவக்குறிச்சி தொகுதியில், திமுக சார்பில் செந்தில்பாலாஜி களமிறங்கி உள்ளதால், அரவக்குறிச்சி தேர்தல் களம் பரபரப்பு நிலையை எட்டியுள்ளது. இந்தநிலையில் கரூர் திமுகவில் சீனியரான முன்னாள் நகராட்சி தலைவர் தாந்தோணி ரவி, திடீரென நீக்கப்பட்டுள்ளது, கரூர் அரசியல் கட்சியினர் இடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 

senthilbalaji

 

அ.தி.மு.கவில், எட்டு ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக செந்தில்பாலாஜி இருந்தபோது , கீழ்மட்ட தொண்டர்கள் முதல் அனைவரையும் தன் கையில் வைத்து இருந்ததால் திமுக வசம் இருந்த கரூர் அதிமுக வசத்திற்கு கொண்டுவந்தார் செந்தில்பாலாஜி. இதற்கு முன்பு அதிமுகவில் இருந்த சீனியர்கள் எல்லோரும் செந்தில்பாலாஜியின் அரசியல் அதிரடியில் அரசியல் பண்ண முடியாமல் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போனார்கள். 

 

 

இதற்கு இடையில் செந்தில்பாலாஜியை அதிமுக மேல்மட்ட அரசியல் உள்ளடியில் அவரிடம் இருந்த மா.செ. அமைச்சர் பதவி என அனைத்தையும் பறிக்கப்பட்ட நிலையில் அவர் தினகரன் பக்கம் சாய்ந்து பிறகு தி.முக.வில் இணைந்த போது அவர் நடத்திய செயல்வீரர்கள் கூட்டம், தேர்தல் பிரச்சார திட்டமிடல் என அனைத்தும் திமுக கட்சியினர் மற்றும் திமுக தலைமையிடமும் பெரிய வரவேற்பையும், நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது. 

 

dmk

 

கரூர் மாவட்ட பொறுப்பாளர் என்கிற முறையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜோதிமணிக்கான தேர்தல் எதிர்கொள்வதற்காக அவர் தயார் படுத்திய கட்டமைப்பும், அதை அவர் நடத்தி காட்டிய விதமும் 780 தேர்தல் களப்பணியாளர்களின் தொலை பேசி எண்களை வைத்து கொண்டு அவர்களை வேலை வாங்கிய விதம் திமுக தலைமையை பிரமிக்க வைத்தது. 

 

இந்த நிலையில் தான் திமுகவின் சீனியர் கட்சிக்காரர் என்று அழைக்கும் தாந்தோணி ரவி என்கிற முன்னாள் நகராட்சி தலைவர் தீடீர் என கட்சியில் இருந்து நீக்கப்பட்டு முரசொலில் அறிவிப்பு வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

 

 

இது குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள கட்சியின் சீனியரிடம் பேசினோம். அவர் கூறுகையில், 

 

தான்தோன்றிமலை நகராட்சி முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவி, கடந்த, 13ல், கரூரில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைவதற்காக கட்சிக்காரர்களை வீடு வீடாக சென்று அழைத்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த கட்சிக்காரர்கள் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியிடம் புகார் கொடுக்கவும் அதன் அடிப்படையில் கட்சி தலைமைக்கு அவர் தகவல் சொல்லவும். அன்றைய தினமே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக, கட்சியின் நாளிதழில் வாயிலாக, தி.மு.க., செயலாளர் அன்பழகன், அறிக்கை வெளியிட்டார். 

 

dmk

 

திமுக சீனியரான தாந்தோணி ரவி கட்சியில் இருந்து நீக்கப்படுவது இது ஒன்றும் புதிது அல்ல இது நான்காவது முறை. ஏற்கனவே 1999ல் முன்னாள் எம்.பி.கே.சி.பிக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தார் என்கிற குற்றச்சாட்டில் நீக்கப்பட்டார். அதன் பிறகு திமுக கட்சி கூட்டத்தில் திமுக சீனியரான பரமத்தியாரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டார் என்கிற குற்றசாட்டில் நீக்கப்பட்டார். அதேபோல வாசுகி முருகேசன் மாவட்ட செயலாளராக இருக்கும் போது. அவருடைய வார்டு பெண்கள் வார்டாக மாறியது அவருடைய மனைவியை நிறுத்தினார். அப்போது சேர்மன் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் காங்கிரஸ் சேர்மன் வேட்பாளருக்கு எதிராக சுயேச்சைக்கு ஆதரவாக இவர் வேலை செய்தார் என்பதால் நீக்கப்பட்டார். 

 

 

தற்போது அவர் அதிமுக இணைவதாக இருந்த தகவல் வந்தால் நீக்கப்பட்டார். ஒவ்வொரு தேர்தலுக்கும் தாந்தோணி ரவி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி நீக்கப்படுவார் என்றார். 

 

இது குறித்து நாம் முன்னாள் நகராட்சி தலைவர் ரவியிடம் கேட்ட போது, "கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில், நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது என, நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். செந்தில் பாலாஜிக்கு போட்டியாக இருப்பேன் என்று கருதியே, என்னை நீக்கி உள்ளார். அதிமுகவில் இருந்து வந்த செந்தில்பாலாஜியை நம்பி கட்சி தலைமை இருக்கிறது. ஒருவேளை இந்த தேர்தலில் எம்.பி தேர்தலில் தோற்றும் சட்டமன்ற தேர்தலில் செந்தில்பாலாஜி தோற்றுபோனால். அவரை மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கினால் அடுத்த வாய்ப்பு எனக்கு தான் என்று நினைத்து செந்தில்பாலாஜி தான் என்னை முன் கூட்டியே நீக்கிட்டார். நான் எந்த கட்சியிலும் இணைவில்லை என்றார். கட்சி தலைமை என்னிடம் எந்த விளக்கமும் கேட்வில்லை. நான் எதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்