Skip to main content

''இந்த தடவையாவது அவரை இம்ப்ரஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன்'' - யாரை சொல்கிறார் தனுஷ்?

Published on 23/12/2020 | Edited on 24/12/2020

 

 '' I think I will impress him at least this time '' - whom does Dhanush say!

 

'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமான, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் 'என்.ஜி.கே.' இப்படம், விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் கடும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பின் நடந்த ஒரு விழா மேடையில், 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் தெரிவித்தனர். இதனையடுத்து உற்சாகமான ரசிகர்கள், இது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

இந்த நிலையில், நடிகர் தனுஷ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கே தொடங்கினேனோ அங்கேயே (அதே செல்வராகவன் + யுவன் சங்கர் ராஜா கூட்டனியில்) நான். நான் இங்கே இருப்பதற்குக் காரணமான தயாரிப்பளார், என்னுடைய படைப்பாளி, சகோதரர் செல்வராகவனுடன் இணைந்தது மகிழ்ச்சி. இந்த தடவையாவது அவரை இம்ப்ரஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்  
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“செல்வராகவனை இயக்குவேன் என நினைத்ததில்லை” - தனுஷ்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
selvaraghavan look from dhanush 50 raayan movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். ராயன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தாண்டிற்குள் இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் இப்படத்தில் நடித்திருப்பதை எக்ஸ் தளம் வாயிலாக அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் இப்படம் தனுஷின் கனவு படம் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளதைப் படக்குழு அவரது கதாபாத்திர லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. புது லுக்கில் செல்வராகவன் இடம்பெற்றிருக்கிறார். இதுவரையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் பல படங்கள் நடித்த நிலையில் இப்படத்தில் செல்வராகவனை தனுஷ் இயக்கியுள்ளார். செல்வராகவனை இயக்குவது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்களை ஒரு நாள் இயக்குவேன் என்று நினைத்ததில்லை சார்” என குறிப்பிட்டுள்ளார்.