
''மறக்கமுடியுமா கலைஞரை'' என்ற தலைப்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம் கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், ‘மறக்கமுடியுமா கலைஞரை’என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அவர் ஆற்றிய தொண்டுகள் அவருடைய ஆளுமைகள் குறித்து நினைவுகூறப்பட்டன.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசுகையில், தமிழில் நான் கிருக்கள் ஆனால் கலைஞர் திருக்குறள். அவருடைய மரணம் துயரமானது, ஆனால் அதைவிட கலைஞரின் மரணம் உயரமானது. தமிழ் எனக்கு உயிர் போன்றது ஆனால் கலைஞரின் மறைவால் தமிழுக்கே உயிர் போனது. அவருடைய இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது என மஞ்சள் நிற துண்டை கலைஞர் கருணாநிதி எப்போதும் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டி ஸ்டாலினுக்கு மஞ்சள் துன்டை அணிவித்தார். மேலும் பேசுகையில் இதை நான் அரசியலுக்காக செய்யவில்லை. பிற மொழி நடிகர் (மோகன் பாபு) எழுதி வைத்து கலைஞருக்காக பேசுவதே கலைஞருடைய வெற்றி. சற்று ஓய்விற்காக மெரினா சென்றவர், நீண்ட ஓய்விற்காக தற்போது சென்றுள்ளார் என உருக்கமாக பேசினார்