Skip to main content

அழுது தவிக்கிறேன்...! - பொள்ளாச்சிக் கொடுமை குறித்து நடிகர் ராஜ்கிரண்

Published on 13/03/2019 | Edited on 13/03/2019
actor Rajkiran


ஒரு தகப்பனாய்,
ஒரு தாத்தனாய்,
பல நூற்றுக்கணக்கான
என் பெண் குழந்தைகளுக்கு
இழைக்கப்பட்டிருக்கும் 
அநீதியை நினைத்து,
அவர்களின் வாழ்க்கை
சூறையாடப்பட்டிருப்பதை அறிந்து,
அழுது தவிக்கிறேன்...

.
தனிமனிதனான என்னால்,
எதுவுமே செய்ய முடியாமலிருக்கும், 
எனது
இயலாமையை நினைத்துக் 
குமுறுகிறேன்...

.
அரசுக்கும், 
அதிகார வர்க்கத்திற்கும்,
காவல் துறைக்கும், 
புலனாய்வுத் துறைக்கும்
தெரியாமல்,
ஏழு வருடங்களாக, 
இப்படி பல
படுபாதகச்செயல்கள் நடந்து,
ஆயிரக்கணக்கான காணொளிகள்
எடுக்கப்பட்டிருப்பதற்கு 
வாய்ப்பே இல்லை...

.
ஆதலால், 
தமிழ் நாட்டின் 
மாணவச்செல்வங்கள், 
தன்னார்வலர்கள்,
இளைஞர்கள், 
மனித நேயர்கள் 
அனைவரையும்
உதவி கேட்டு 
நான் கெஞ்சுகிறேன்...

.
இந்த வழக்கைப் 
பொறுப்பில் இருக்கும்
காவல் துறையினரிடமிருந்து 
தவிர்த்து,

.
சிறப்பு நீதி மன்றத்தின் மூலம்,
நீதி மன்றத்தின் 
மேற்பார்வையிலேயே, 
தன்மானமும், கடமை உணர்வும்,
அரசியல், அதிகார வர்க்கத்திற்கு 
அடிபணியாத
நேர்மையும், 
நெஞ்சுரமும் கொண்ட
காவல் துறை அதிகாரிகளை 
தேர்ந்தெடுத்து,
அவர்கள் மூலம் வழக்கை நடத்தி,

.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், 
மற்றும்
அவர்களுக்குத் துணை போன,
அவர்களுக்காக மூடி மறைத்த,
அவர்களால் பயனடைந்த
அத்தனை 
முக்கிய பிரமுகர்களையும்
கூண்டிலேற்றி, 
நீதியை நிலை நாட்டவும்
தர்மம் காக்கப்படவும்,
உங்கள் அனைவரையும் 
கெஞ்சுகிறேன்
*
 

 

 

சார்ந்த செய்திகள்