நவம்பர் 5 மட்டும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் கள ஆய்வு குறித்து தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் 'களஆய்வும் தொடரும்; திராவிடம் ஆடல் அரசின் சாதனைத்திட்டங்களும் தொடரும்' என தெரிவித்துள்ள முதல்வர் நவம்பர் 5 மற்றும் ஆகிய 6 ஆகிய தேதிகளில் கோவையில் கள ஆய்வு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், 'பருவமழை நிவாரணப் பணிகள் திறம்பட நடைபெற்று வருகிறது. இத்தைப்பொறுக்க முடியமால் அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால் எதிர்வரிசையில் இருப்பவர்கள் அதிலும் 10 ஆண்டுகால மோசமான ஆட்சியில் கடைசி 4 ஆண்டுகள் படுமோசமான ஆட்சியை நடத்திவர்கள் மக்கள் மீது அக்கறையுடன் செயல்படும் திராவிட மாடல் அரசை பார்த்து அடிப்படை இல்லாத அவதூறுகளை பரப்பி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கொண்டிருப்பதை காணும்போது அவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பை உங்களில் ஒருவனாக நான் பெற்றதில் பெருமை கொள்கிறேன். கள ஆய்வுகள் நிறைவுற்றதும் கட்சிப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.