Skip to main content

என்னை அடையாளம் காட்டிய தாய் கழகமான அதிமுகவுக்கு செல்கிறேன்;அமமுகவிற்கு மாஜி அமைச்சா் பச்சைமால் குட்பை?

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

பொிதும் எதிா் பாா்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து சமீபகாலமாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் முக்கிய நிா்வாகிகள் சென்ற வண்ணமாக உள்ளனா். இதில் தற்போது அந்த வாிசையில் செல்ல இருப்பவா் அதிமுக மாஜி மந்திாியும், அமமுக குமாி கிழக்கு மா.செ யுமான பச்சைமால்தான். இவா் நாளை அல்லது மறுநாள் அதிமுக வில் மீண்டும் இணைய போவதாக பேசப்படுகிறது. அவருடன் நாகா்கோவில்  அதிமுக முன்னாள் எம்எல்ஏ யுமான நாஞ்சில் முருகேசனும் இணைகிறாா்.

 

 I am going to the admk; who identified me;

 

ஜெயலலிதா இருந்தபோது ஒரு கட்டத்தில் குமாி மாவட்ட அதிமுக வில் கோலோச்சியவா்தான் இந்த பச்சைமால். சாதாரண துணி கடையில் வேலை செய்து வந்த பச்சைமால் அப்போது ராஜாக்கமங்கலம் அதிமுக ஒ.செ ஆக இருந்தபோது 2001-ல் குளச்சல் தொகுதியில் நின்று எம்எல்ஏ ஆனாா். அதன்பிறகு 2006-ல் மீண்டும் குளச்சலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா்.

 

 I am going to the admk; who identified me;

 

பின்னா் 2011-ல் குமாி மா.செ ஆக்கப்பட்டு கன்னியாகுமாி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து ஜெயலலிதா அவரை வனத்துறை அமைச்சராக்கினாா். பின்னா் 2016-ல் மீண்டும் குளச்சலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அதன்பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமமுகவில்  இணைந்து கி.மா.செ ஆக இருந்து வந்தாா். டிடிவி யுடன் நெருக்கமாக இருந்து வந்த பச்சைமால் பாராளுமன்ற தோ்தலில் அமமுகவின் படுதோல்வி அவரை கட்சிமாற வைத்து விட்டது.

இந்தநிலையில்தான் அவரை அரசியலில் உச்சாணி வரை அடையாளம் காட்டிய அதிமுகவில் அவருடைய ஆதரவாளா்களுடன் இணைகிறாா் என்கின்றனா்.

 

 

சார்ந்த செய்திகள்