Skip to main content

வீட்டின் வாசலில் தோண்டப்பட்ட குழி; கணவனின் வெறிச்செயல் - அதிர்ச்சியடைந்த காவல்துறை!

Published on 08/10/2024 | Edited on 08/10/2024
husband who incident his wife and buried her in a pit

ராமநாதபுரம் ஆவட்டம் ராமேஸ்வரம் ஏரகாடு பகுதியை சேர்ந்தவர்கள்  தர்மராஜ் - தனலட்சுமி தம்பதியினர். தர்மராஜ் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனலட்சுமி துனி தைக்கு வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை இருவருக்கும் இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தர்மராஜ் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனலட்சுமியின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். உயிருக்கு போராடிய தனலட்சுமி மீது கல்லைப் போட்டு தர்மராஜ் கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே தனலட்சுமி துடித்துடித்து உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டின் வாசல் முன்பு அவசர அவசரமாக குழிதோண்டிய தனலட்சுமியின் உடலை புதைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தர்மராஜிடம் விசாரணை செய்தனர். அதில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கொன்று வீட்டின் முன் புதைத்தை ஒப்புக்கொண்டர். பின்னர் உடலைத் தோண்டி  எடுத்த போலீசார், பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கணவன் தர்மராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்