Skip to main content

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

Husband sentenced to 7 years in prison for inciting wife to take wrong decision...

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது மூங்கில் பாடி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி(36). இவர் அதிமுகவில் முக்கியப் பிரமுகராக உள்ளவர். இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த 28 வயது தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனலட்சுமி அதிமுகவில் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு, தனக்கும் தனது மனைவிக்கும் கள்ளக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ சீட்டு கேட்டு கட்சித் தலைமைக்குப் பணம் கட்ட முடிவெடுத்துள்ளார். இதனால், தனது மனைவி தனலட்சுமியிடம் 20 லட்ச ரூபாயை அவரது பெற்றோரிடம் இருந்து வரதட்சணையாக வாங்கி வருமாறு மிரட்டிக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

 

அத்தோடு தேர்தல் பணிக்காக கார் வாங்கிக் கொடுக்குமாறும் அதற்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்றும் பல்வேறு முறைகளில் வரதட்சணை கேட்டு தனலட்சுமியைக் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத தனலட்சுமி மனவேதனை அடைந்து, கடந்த 2011 மார்ச் மாதம் 27 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

இதுகுறித்து தனலட்சுமியின் சகோதரர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய மூர்த்தியை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த  வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சாந்தி, "மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அதிமுக பிரமுகர் சூரியமூர்த்திக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை" விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சிறப்பாக வாதாடியுள்ளார். நேற்று ஒரே நாளில் மகளிர் நிறைவு நீதிமன்றத்தில் மனைவிகளைக் கொடுமைசெய்த இரண்டு வழக்குகளில் கணவன்மார்களுக்கு தண்டனை கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை; குற்றவாளிக்கு 83 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
The convict was sentenced to 83 years of rigorous imprisonment for A 13-year-old girl was misbehaviour

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் பிளைவுட் நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இஜிபுல் இஸ்லாம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில், இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ள ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து வாழும் அந்த பெண்ணுக்கு 13 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இதனையடுத்து, இஜிபுல் இஸ்லாம், அவர்கள் இருவரையும் அழைத்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், அந்த பெண் கடைக்கு செல்வதற்காக வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில், வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை இஜிபுல் இஸ்லாம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், இஜிபுல் இஸ்லாம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாவூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிமன்றம் நேற்று (01-01-24) அதிரடி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், இஜிபுல் இஸ்லாமுக்கு 83 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டது. 

Next Story

மனைவி இறந்த செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே உயிரிழந்த கணவன்!

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 husband passed away the second he heard the news of his wife lost their life

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா(65), ஜோதி(60). இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு  2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த இந்நிலையில் நேற்று ஜோதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

ad

இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று இருவர் உடலுக்கும் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மிகவும் பாசமாக வாழ்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.