மனிதர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், ஆனால், மனிதர்களை போலவே மாடுகளும் முக்கியம் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பசுக்களை கடத்தியதாக கூறி ஒருவர் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ’ஒவ்வொறு மதமமும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு நபரும் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது அவர்களுடைய கடமை. எனவே, அனைவருக்கும் நாம் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மனிதர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும், ஆனால், மனிதர்களை போலவே மாடுகளும் முக்கியம். இயற்கையிலேயே மனிதர்களுக்கும் பசுக்களும் தங்களுக்கே உரிய குணாதியங்களை பெற்றுள்ளன.
ஆல்வார் விவகாரத்திற்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பற்றி பேசுபவர்கள் 1984-ம் ஆண்டு சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை பற்றி பேசுவார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.