Published on 28/04/2020 | Edited on 28/04/2020

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தான் புதியதாக நடித்துவரும் திரைப்படம் குறித்து பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் குறித்தும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்துள்ளதாவது,
பள்ளி, மருத்துவமனைகள் இறைவன் உறையும் இடமாக கருதவேண்டும். மதங்களை கடந்து மனிதம் முக்கியம் என்பதை பிள்ளைகளுக்குச் சொல்லித்தர விரும்புகிறோம். அறிஞர்கள், விவேகானந்தர் போன்ற ஆன்மீக பெரியோர்கள் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய கருத்தில் மிக உறுதியாக உள்ளோம். தரைகுறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் நண்பர்கள், ரசிகர்கள் துணை நிற்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.