Published on 29/08/2020 | Edited on 29/08/2020
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் பற்றி பெற்றோர் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்வது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்கான பொருட்கள் வழங்குவதற்காக ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும். இந்தாண்டு ஒன்றாம் வகுப்பில் 1.72 லட்சம் குழந்தைகள் கூடுதலாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்." என்றார்.