Skip to main content

பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு உறுதியான தொகுதிப்பங்கீடு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
How many seats for AAMUK in BJP alliance?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாஜக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்திற்கு வந்துள்ளனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுகவின் டி.டி.வி.தினகரன் ஆகியோர் வருகை தந்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து கையெழுத்து ஒப்பந்தம் செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம் தமாகாவிற்கு தொகுதி ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட இருக்கிறது.

அமமுகவின் டி.டி.வி.தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ் இன்று மாலை எத்தனை தொகுதி, என்ன சின்னம் என்ற கேள்விகளுக்கு விடை தெரியும் என தெரிவித்துள்ளார்.   

சார்ந்த செய்திகள்