நாடு முழுவதும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம், அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தை தரும் எனவும், அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழிதான் அதை அடைவதற்குரிய மொழி எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அதற்கான கண்டனங்களை அறிக்கைகளாகவும், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் கண்டங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
சூரியன் கூட ஒட்டு மொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்து விட முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சூரியன் கூட ஒட்டுமொத்த பூமியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை.
— வைரமுத்து (@vairamuthu) September 14, 2019
இந்தி மட்டும் எப்படி
இந்தியாவை இணைத்து விட முடியும்?