Skip to main content

மத்திய அரசின் "முத்ரா கடன்" திட்டத்தை இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

மத்திய அரசு படித்த இளைஞர்கள் மற்றும் ஏற்கெனவே நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருபவர்கள் தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவும் , தொழிலை தொடங்க மானியத்துடன் கடன் வழங்கும் திட்டமே "முத்ரா கடன்" வழங்கும் திட்டம். இந்த கடன் வழங்கும் திட்டத்தை தேசிய வங்கிகளிடம் விண்ணப்பித்து பெறலாம். "முத்ரா கடன்" திட்டத்தில் மூன்று வகை உள்ளது.

1.  SHISHU - குறைந்தது 50,000 வரை கடன் பெறலாம்.
2  .KISHOR - 50,000 முதல் 5,00,000 வரை கடன் பெறலாம்.
3. TARUN - 5,00,000 முதல் 10,00,000 வரை கடன் பெறலாம்.
 

mudhra loan

இந்த மூன்று திட்டத்தில் தங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டுமோ? அந்த திட்டத்தை தேர்வு செய்து வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். "முத்ரா கடன்" விண்ணப்பத்தை இணையதளம் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள முகவரி : https://www.mudramitra.in/ ஆகும். 
 

இந்த இணையதளத்தில் முத்ரா கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? என்பது இடம் பெற்றிருக்கும். அதன் பின் விண்ணப்பிக்க வேண்டும். முத்ரா கடன் திட்டத்தில் விண்ணப்பித்து சில நாட்கள் கழித்து சமந்தப்பட்ட வங்கியில் இருந்து தொலைபேசி மூலம் விண்ணப்பித்த நபர் வங்கிக்கு நேரில் வருமாறு வங்கி அலுவலர் தகவல் தெரிவிப்பார். பின்பு வங்கிக்கு சென்று வங்கியின் மேலாளரை சந்திக்க வேண்டும். பல ஆலோசனைகளுக்கு பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு வங்கிகள் முத்ரா கடன் உதவியை வழங்கும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி : https://www.mudramitra.in/. அறியலாம். இதற்கான கட்டணமில்லா உதவி எண் : 1800-425-1646 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்லாம்.
 

பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்