காட்டுமன்னார்கோவிலில் இலங்கை தமிழர்களுக்கு ரூ 3.60 கோடியில் வீடுகள் கட்டும் பணியை வேளாண்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக காட்டுமன்னார்கோவில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 ச.அடி கொண்ட ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளாக மொத்தம் 18 தொகுப்புகளை கொண்டு தலா ரூ.5 லட்சம் வீதம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணிகள், மேலும் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு செல்வதற்கு ரூ.15.15 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சாலை பணிகள் துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் எடுத்து வைத்து கல்வெட்டை திறந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன், திட்ட இயக்குநர் பவன்குமார் ஜிகிரியப்பனார். வருவாய் கோட்டாட்சியர்கள் கடலூர் அதியமான் கவியரசு, சிதம்பரம் ரவி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.