Skip to main content

5 நாட்களுக்கு அனல் காற்று... கட்சிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கோரிக்கை!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

ரகத


தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் வேளையில், சில வேட்பாளர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 4 மணி வரை பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் வேண்கோள் விடுத்துள்ளது. ஒருபுறம் கரோனா பயம் காட்டி வரும் நிலையில், தற்போது வெயிலும் கடுமை காட்ட தொடங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub