நீட் தேர்வை எதிர்த்து நடைபயணம்: சமூக ஆர்வலர் கைது!
நீட் தேர்வை எதிர்த்து நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சமூக ஆர்வலர் பாரதிகண்ணன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வை தடை செய்ய கோரியும், மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டு இன்று தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து தொடங்கி எழும்பூர் பெரியார் திடலில் நாளை முடிவடையும் வகையில் (#rally for anitha) இந்த நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சமூக ஆர்வாலர் பாரதிகண்ணனை நேற்று முதல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாரதிகண்ணன் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கு ஆதரவாகவும், குளங்களை சுத்தம் செய்வது உள்ளிட்ட பவ்வேறு சமூகபிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து மிதிவண்டியில் வழிப்புணர்வு பயணம் மேற்கொண்டவர்.
தற்போது இவர் நீட் தேர்வை எதிர்த்து நடைபயணம் மேற்கொள்ள திட்டமிருந்த நிலையில் அதனை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாம்பரம் காவல்துறையினர் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- ஜீவா பாரதி