திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (27.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்களால் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) ஆகியவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்ச ரூபாயும், தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த அபராத தொகையான ரூ. 37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.