Skip to main content

’அவர் அடிப்பட போகிறார்!’ - கமல்ஹாசனை எச்சரித்த முத்தரசன் 

Published on 23/09/2018 | Edited on 23/09/2018
MULLAI

 

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா திருச்சியில் இன்று நடைப்பெற்றது.  இதில் தி.க தலைவர் வீரமணி,  சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய முத்தரசன்,  புதிய கட்சிகள் தொடங்குகிறார்கள், யாரையும் வர கூடாது என நாம் சொல்ல கூடாது.  ஒருவர் கட்சி ஆரம்பிக்கவில்லை,மற்றொருவர் கட்சி ஆரம்பித்து வலதும் அல்ல,இடதும் அல்ல என்கிறார். அவர் அடிப்பட போகிறார். கட்சி தொடங்கிய அனைவரும் நிலைத்து நிற்பதில்லை.

 

சமூக விஞ்ஞானியான பெரியார் நேற்றும் இருந்தார்,இன்றும் இருக்கிறார்,நாளையும் இருப்பார்.  சாதிய சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது. தமிழகத்தில் இருந்த ஆணவ படுகொலை இன்று ஆந்திராவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.அதை பெற்றோரே செய்கிறார்கள் ஜாதியின் மீதுள்ள வெறியின் காரணமாக இது நடக்கிறது.

 

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவர் உள்ளிட்ட பொருப்புக்களுக்கு வந்தவர்கள் கூட தற்போது இட ஒதுக்கீடு தங்களுக்கு தேவையில்லை என்கிறார்கள், அவர்களாக அதை சொல்லவில்லை சொல்லவைக்கப்படுகிறார்கள்.

சமூக நீதிக்கான போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

பெரியார் பிறந்தநாள் வருட வருடம் கொண்டாடப்படுகிறது, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரியார் சிலையை சிலர் அவமதிக்கிறார்கள்.இதற்காக ஒட்டுமொத்த தமிழனுக்கும் ஆத்திரம் வர வேண்டும்.பெரியார் சிலையை சேதப்படுத்துவதால் பெரியார் அழிந்து விட மாட்டார்,அவர் தொடர்ந்து இருப்பார்.தமிழக அரசு ஆரம்பித்திலேயே இதற்கு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை.

 

பெரியாரின் கொள்கை தொடர்ந்து வளர்ந்து இறுதியில் வெற்றி பெறும்,காரணம் அது விஞ்ஞானம்.  நம் நாட்டில் மனு தர்மத்திற்கு எதிரான யுத்தம் நடைபெறும், அதில் கருப்பும் சிகப்பும் ஒன்றாக இருந்து போராடும்’’ என்றார்.

 

சார்ந்த செய்திகள்