காவல்துறையின் உதவியோடு கள்ள சாராய வியாபாரம்;
ஊர் மக்கள் போராட்டம்!
ஊர் மக்கள் போராட்டம்!
தஞ்சை, நாகை மாவட்ட எல்லை கிராமமான நல்லாதடி கிராமத்தில் காரைக்கால் சரக்கும், கள்ளச்சாராயமும் பந்தநல்லூர் காவல் துறையினரின் உதவியோடு விற்பனை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி கிராமங்கள் நல்லாதடி, அழகேசபுரம் அங்கு 2000த்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சசிக்குமார் உள்ளிட்ட மூன்றுபேர் கள்ளசாராயம் விற்றுவருகின்றனர். அது குறித்து பல முறை பந்தநல்லூர் காவல்நிலையத்தில் புகாராகவும், போன் மூலமும் தகவல் கூறியுள்ளனர்.
ஆனால் காக்கிகளோ சாராய வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர் என இன்று பெண்கள், ஆண்கள் என 300க்கும் அதிகமானோர் குத்தாலம், பந்தநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மூன்று மனி நேர போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
- க.செல்வகுமார்