நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 28 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடஙகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.