ஆளுநர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
தமிழக ஆளுநர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் 17 பேர் நேற்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் நேற்று தியானத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், நாளை ஆளுநரை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரைச் சந்திக்க இருப்பதால், ஆளுநர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.