எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கின் விசாரணையில் இருதரப்பினரின் வாதங்களும்,
3 விவகாரங்களில் சபாநாயகர் தனது வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். சபாநாயகர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். குறுகிய காலத்தில் எம்.எல்.ஏக்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்காமல் 18 பேருக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. தகுதி நீக்கத்திற்கு உள்ளான 18பேரும் தற்போது வரை அதிமுகவில் தான் உள்ளனர் என டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கும் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கும் வேறு வேறு. தினகரன் ஆதரவு 18எம்.எல்.ஏக்களும் ஆட்சியைக் கவிழ்க சதியில் ஈடுபட்டனர். ஆட்சியைக் கவிழ்ப்பேன் என தினகரன், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் வெளிப்படையாக பேசினர் என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.