Skip to main content

சுபமுகூர்த்த தினங்கள்; பதிவுத்துறைத் தலைவர் அதிரடி உத்தரவு!

Published on 06/11/2024 | Edited on 06/11/2024
Head of registration dept order for Auspicious Days

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாத முகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்குக் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து பதிவுத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுபமுகூர்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். இதனால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்