திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி அடுத்துள்ள மணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவர் தவறு செய்யும் மாணவ மாணவிகளுக்கு தண்டனை தருகிறேன் என்ற பெயரில் தவறான நோக்கத்தில் தொடுவது மற்றும் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்றவைகளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை பிடித்து தர்ம அடி கொடுத்ததோடு, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் பாஸ்கரை விசாரித்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.