கைத்தறி ஜவுளி உற்பத்தி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 5 சதவீத்திலிருந்து 12% சதவீதமாக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி நெசவாளர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே தமிழ்நாடு முதன்மை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் சங்கம் சார்பாக, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராஜூ தலைமை தாங்கினார்.
போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மத்திய அரசு கைத்தறி உற்பத்தி ரகங்களுக்கு விதிக்கப்பட்ட 12% ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்டத்தில் உள்ள 180 கூட்டுறவு சங்க பணியாளர்களும் இன்று (20/12/2021) தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நெசவாளர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.