தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு இதுதொடர்பான மின்னஞ்சல்களை அனுப்பி தேர்வு நடைபெறும் தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்புகளை அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டில் 32 போட்டி தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்தார். மேலும் பேசிய அவர், வரும் பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு போட்டி தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு வரும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும் எனவும், புதிய முறையில் ஒஎம்ஆர் ஷீட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.