Skip to main content

தமிழகம் முழுவதும் குரூப்-1 முதல்நிலை தேர்வு தொடங்கியது! (படங்கள்)

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

தமிழகம் முழுவதும் குரூப்-1 முதல்நிலை தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 856 தேர்வு மையங்களில் 2,57,237 பேர் தேர்வை எழுதி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 46,965 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.

 

கோட்டாட்சியர், வணிகவரி உதவி ஆணையர், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 66 பணியிடங்களை நிரப்ப குரூப்- 1 முதல்நிலை தேர்வு நடைபெற்று வருகிறது. முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இன்றைய தேர்வில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றப்பட்டுள்ளது. 

 

இதனிடையே கோவை மாவட்டம், சித்தாபுத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி.யின் தலைவர் பாலச்சந்திரன், "குரூப் -1 தேர்வில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை மாற்ற முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் விவரத்தை தேர்வு மையங்களிலேயே தனியாகப் பிரித்து விடைத்தாள் மட்டும் வேறு கவரில் வைக்கப்படும். கூடுதல் விவரங்களைச் சரிபார்க்க 1 மணி நேரம் 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது" என்றார். 

 

சார்ந்த செய்திகள்