
சென்னையில் உள்ள "ஈவேரா சாலை" என்பதை "கிராண்ட் வெர்ஸ்டன் டிரங்க் ரோடு" என்று மாநகராட்சி சார்பில் இன்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், "சென்னை கிராண்ட் வெர்ஸ்டன் டிரங்க் ரோடு சாலை பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அது ஈ.வெ.ரா சாலை என அழைக்கப்படுவதுண்டு. தமிழக அரசின் ஆவணங்களில் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் சாலை என்றுதான் உள்ளது" என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பெயர்ப் பலகையை கருப்பு மையால் அழித்துள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.