Skip to main content

'இது ஆளுநரின் சதித் திட்டம்' - 10க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகள் போராட்டம் அறிவிப்பு

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

mm

 

பட்டமளிப்பு விழா தாமதமாவதைக் கண்டித்து திமுக மாணவரணி போராட்டம் அறிவித்துள்ளது.

 

பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் இன்னும் பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில் இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். பட்டமளிப்பு விழாவிற்கான தேதியை தமிழக ஆளுநர் தரவில்லை என்பதால் அவை தடைப்படுவதாகவும், இதனால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் திமுக மாணவரணி உள்ளிட்ட சில மாணவ அமைப்புகள் வரும் ஜூன் 16 ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம், திராவிடர் மாணவர் கழகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டாக இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், 'தமிழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்காமல் சுமார் 9 லட்சத்து 29,000 மாணவர்கள் பட்டம் பெறாமல் உள்ளனர். தனது சட்டப்பூர்வ கடமையைச் செய்ய ஆளுநர் தவறியுள்ளார்.

 

இந்திய அரசியல் சாசனப்படி நடப்பேன் என்று பதவியேற்ற ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளார். இது மாநில அரசின் உரிமைக்கும், பல்கலைக்கழகத்தின் சுயாட்சி தன்மைக்கும் எதிராக மத்திய அரசின் முழு ஆளுகைக்கு எடுத்துச் செல்லும் ஒரு சதித் திட்டமாகப் பார்க்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்