7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளூநருக்குக் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது ஆளூநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பேரரறிஞர் அண்ணாசின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் 7 பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘’தமிழர்கள் எதிர்பார்க்கும் முடிவை ஆளுநர் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்’’ என்று தெரிவித்தார்.