Published on 20/06/2020 | Edited on 20/06/2020
தமிழகத்தில் உள்ள 17 அமைப்பு சாரா நல வாரியங்களில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்ய இணையத்தளம் தொடங்கப்பட்டது.
labour.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களது பெயர்களைத் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தொழிலாளர்கள் மாவட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்வதில் உள்ள சிரமத்தைப் போக்க தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.