Skip to main content

தூங்கிக் கொண்டிருந்த அறையை பூட்டி விட்டு கொள்ளை; போலீசார் விசாரணை

Published on 26/01/2025 | Edited on 26/01/2025
Locked and robbed the room where he was sleeping; Police investigation

வீட்டில் ஆட்கள் இருந்தும் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளி பக்கமாக பூட்டி அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் புது தெரு பகுதியில் சேர்ந்தவர் பாஸ்கரன் (40) உரம்  வியாபாரம் செய்து வருகிறார் . இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டில் ஏழு நபர்கள் இருந்த நிலையில் அவர்கள் உறங்கி இருந்த அறைகளை வெளிப்புறமாக பூட்டி விட்டு வீட்டில் வைத்திருந்த சுமார் 21 சவரன் தங்க நகை, 400 கிராம் வெள்ளிப் பொருட்கள், 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலை எழுந்து கதவை திறக்க முயற்சித்த பாஸ்கரன் வெளிப்புறமாக தாழிட்டு இருப்பதை அறிந்து கூச்சலிட்டதால் பெயரில் வீட்டில் அருகாமையில் இருந்தவர்கள் அறையின் கதவுகளை திறந்து உள்ளனர்.

சம்பவம் குறித்து பாஸ்கரன் மற்றும் அவரது உறவினர்கள் திமிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த திமிரி போலீசார் கொள்ளை  சம்பவம் குறித்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் பிச்சாண்டி என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சி நடைபெற்றது பிச்சாண்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகனின் வீட்டிற்குச் சென்றுள்ளார் வீட்டில் எந்த ஒரு நகையும் பணமும் வைக்காத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக நகை, பணம் திருடு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திமிரி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்